Advertisment

வம்பிழுத்த திமுக நிர்வாகி- சீமான் கூட்டத்தில் கைகலப்பு

a5829

Brawl breaks out at DMK executive-Seeman meeting Photograph: (seeman)

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக விருத்தாச்சலம் வந்திருந்த சீமான் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்ற பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சீமானுடைய காரை வழிமறித்து தகாத வார்த்தைகள் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அது குறித்து அந்த நபரிடம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவதூறாக பேசிய திமுக நிர்வாகியை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காரை வழிமறித்து அவதூறாக பேசிய திமுக நிர்வாகி கைது செய்ய வேண்டுமென விருத்தாசலம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment
police seeman dmk naam tamilar virudhachalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe