உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த மே 14ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய், வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
அதனால் தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்யகாந்த்தை நியமிக்க, பி.ஆர்.கவாய் இன்று (27-10-25) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மத்திய அரசுக்கு பி.ஆர்.கவாய் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பும். அதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்று புதிய தலைமை நீதிபதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், அவர் வரும் நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். இவர் வரும் பிப்ரவரி 9, 2017ஆம் வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/suryabrgavai-2025-10-27-11-09-49.jpg)