பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான கிருஷ்ணா. இவர் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே தொழிற்சாலையில் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சோனு என்ற இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணாவிற்கும், இளம்பெண் சோனுவிற்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சோனுவை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், சோனுதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, கிருஷ்ணாவுடனான காதலை தொடர்ந்து வந்திருக்கிறார். இதன் காரணமாக காதல் ஜோடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்த சூழலில் 28 ஆம் தேதி இரவு சோனு தங்கிருந்த வீட்டிற்கு சென்ற கிருஷ்ணா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்போது, சோனு மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் இருவரும் கார சாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது எல்லை மீறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலி என்று கூட பார்க்காமல், சோனுவை சுட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் காதலி சோனு கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். இதையடுத்து, அங்கிருந்து காதலன் கிருஷ்ணாவும் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக நொய்டா காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சோனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த நொய்டா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துணை ஆணையர் ஷக்தி மோகன் அவஸ்தி தலைமையில் நான்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கிருஷ்ணாவைத் தேடி வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலனே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/29/4-2025-11-29-18-04-56.jpg)