Advertisment

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி : மின்வாரியத்தின் அலட்சியம் காரணமா? - உறவினர்கள் சாலை மறியல்!

pdu-earth-child

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (எ) மாணிக்கமுத்து. இவரது மகன் செல்வக்கணபதி (வயது 13). இவர் சிறு வயதில் இருந்தே சிலட்டூர் அருகே தேவர்பட்டி கிராமத்தில் உள்ள தாத்தா, பாட்டி, பெரியம்மாவோடு தங்கி இருந்து சிலட்டூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று (24.08.2025) மதியம் செல்வக்கணபதி தனது நண்பனோடு சென்று கொண்டிருந்த போது அவரது வீட்டிற்குச் செல்லும் பாதை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலியில் விளையாட்டாக தொட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி துடிதுடித்து விழுந்துள்ளார். 

Advertisment

அச்சமயத்தில் சிறுவன் துடிதுடித்து விழுந்ததைப் பார்த்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் செல்வக்கணபதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலையடுத்து மருத்துவமனையில் கூடியிருந்த சிறுவனின் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். அப்போது அங்கு வந்த போலிசாரிடம் பாதையை மறித்து தடுப்பு வேலி அமைத்ததாலும் மின் கம்பத்தில் இருந்து எர்த் கம்பியை மின்கம்பம் மூலம் கீழே இறக்கியுள்ளது. அந்த மின்கம்பத்தில் தடுப்பு வேலி கட்டப்பட்டுள்ளதால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் மருத்துவமனை முன்பு அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இதனையடுத்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கடைசி மின்கம்பங்களில் பூமி எர்த் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இந்த மின்கம்பத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் இரும்பு வேலியை கட்டி வைத்துள்ளனர். அதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் மின் கம்பத்தில் இரும்பு வேலி அமைத்தால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் கூட மின்வாரிய ஊழியர்கள் ஏன் இரும்பு வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியா ஒயர்மேனுக்கு இது தெரியாமல் நடந்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர் உறவினர்கள். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.

children incident Police investigation pudukkottai TANGEDCO tneb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe