வேலூரில் 13 வயது சிறுவன் ஒருவன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சஞ்சய். இரவு நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் நடந்து சென்ற பொழுது சிறுவனை விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காலில் வலி ஏற்பட்டு சிறுவன் அலறித்துடித்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் காலில் ஏற்பட்ட வலியுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் தற்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.