Bone fragment in veg biryani and police Action taken against seller due to controversy
சாலையோரக் கடையில் விற்கப்பட்ட வெஜ் பிரியாணி பொட்டலத்தில் எலும்புத் துண்டு இருந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்தவர் அனில் சர்மா. இவர் நீலம் தொழிற்சாலைக்கு அருகே உள்ள சாலையோரத்தில் ‘ஆர்.கே. பிரியாணி’ என்ற பெயரில் இயங்கும் வண்டிக்கடையில் இருந்து வெஜ் பிரியாணியை பொட்டலம் கட்டி வாங்கியுள்ளார். அந்த பிரியாணியை வீட்டிற்கு எடுத்துச் சென்று அவர் தனது குடும்பத்துடன் சாப்பிட தொடங்கியுள்ளார். அப்போது அந்த பிரியாணி பொட்டலத்தில் ஒரு கறி எலும்பு துண்டு இருந்ததை கண்டு சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பிறகு, அந்த பிரியாணி பொட்டலத்தை சர்மா அந்த கடைக்குக் கொண்டு விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். அந்த விற்பனையாளரும் தனது தனது தவறை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விற்பனையாளர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த என சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், வண்டியில் ஆர்.கே.பிரியாணி என்ற பெயர் இருந்தபோதிலும் க்யூஆர் குறியீடு ராகுல் என்று காட்டியதாகவும், விற்பனையாளர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ரஷீத் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவரின் குடும்பத்தினர் கூறுகையில், ‘நாங்கள் அதை சைவம் என்று நினைத்து வாங்கினோம், ஆனால் சாப்பிடும்போது ஒரு எலும்பு வெளியே வந்தது. பெயரும் அடையாளமும் குழப்பத்தை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்தனர். விற்பனையாளருடன் சர்மா வாக்குவாதம் செய்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வெஜ் பிரியாணியில் எலும்பு துண்டு இருந்ததால் அந்த பகுதி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், விற்பனையாளரை கைது செய்து விசார்ணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us