வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் அண்மையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் முதலமைச்சரின் வீடு, அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் ஆகிய இடங்களுக்கு பலமுறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது.
மிக அண்மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக இரண்டு முறை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவை புரளி என்று தெரியவந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிரட்டலைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திடீரென அங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.