சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மயிலாப்பூர் அமைந்திருக்கக்கூடிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவி  சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தனர். ஆனால் சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.