Bomb threat to Coimbatore Collectorate - Police investigating Photograph: (kovai)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அருகிலேயே உள்ள கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் இருந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடன் அங்கு குவிந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் உள்ளிட்ட வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை கோவை மதுக்கரையில் போலீசார் வாகன சோதனையின் போது சுமார் 2 டன் கொண்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.