மற்றும் எம்பி கதிர் ஆனந்த் வசிக்கக்கூடிய இல்லத்திற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தகவலறிந்து வந்த வேலூர் காவல்துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று வீடு முழுவதும் தற்போது சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் எம்பி கதிர் ஆனந்த் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீட்டில் இல்லை அவர்கள் அனைவரும் சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு வைத்திருப்பது வதந்தி என தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சோதனையை முடிந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.