காணும் பொங்கலை முன்னிட்டு காட்டுப்பள்ளியில் நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரையில் கடற்கரையில் பொதுமக்கள் திரண்டு கடலில் குளித்து மகிழ்ந்தனர். மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் ஆங்காடு சேர்ந்த அஜீத்குமார் (30) தனது நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அஜீத்குமார் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisment

பின்னர் கரை ஒதுங்கிய அவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.