ப்ளூ பேண்ட்: அதற்காக ஒரு மூவ்மெண்ட் - எடப்பாடி புது முயற்சி!

Web

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, அவர்களை வஞ்சித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்த அரசாக இருக்கிறது ஸ்டாலின் மாடல் அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்கு எதிரான ஒரு மூவ்மெண்டையும் தொடங்கியிருக்கிறார்.  அதாவது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும், கையில் ப்ளூ பேண்ட் அணிய அறிவுறுத்தியுள்ளார் எடப்பாடி. 2026-ல் அமையவுள்ள அதிமுக ஆட்சி, இளைஞர்களுடன் துணை நிற்கும் என்பதைக் குறிப்பதற்கான அடையாளம் தான்  இந்த ப்ளூபேண்ட் அணிவது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து  நண்பர்கள் அனைவரும், திங்கட்கிழமையான இன்று காலை தவறாமல் அணிந்து, சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யவும், அதிமுகவின்  பிற நிர்வாகிகளையும் இவ்வாறு பேண்ட் அணிந்து தங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதிமுக ஐ.டிவிங்க் வலியுறுத்தியதை அடுத்து அதிமுகவினர் இந்தமூவ்மெண்ட்டை தொடங்கியிருப்பது அரசியலில் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது

admk ops
இதையும் படியுங்கள்
Subscribe