பாரதிய ஜனதா கட்சி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் நடக்க இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெறஇருந்தது இருந்தது.
கூட்டத்திற்கு வர இருக்கும் மாவட்ட தலைவர் ஆனந்தன் பொறுப்பேற்ற நாளில் இருந்து மாவட்டம் முழுவதிலும் குறிப்பாக சங்கரன்கோவிலில் கடந்த 2014 வரை நம் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரை நகரத் தலைவராக அறிவித்தது உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதாகவும், சங்கரன்கோவில் பி.ஜே.பி. நிர்வாகிகள் இடையே குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி செயல்பாடுகள் திருப்தி இல்லை என்றும் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பாளர்களை உறுதி செய்கிறார்கள். சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள் பொறுப்பாளர்கள் ஆக நியமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு திறன் பட தீர்வு காண முடியாத தென்காசி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று போராடும் வகையில் அவர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பி.ஜே.பி. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வரும்போது அக்கட்சியினரே அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.