சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிரணி சார்பில் கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்புனர்வு சம்பவத்தை கண்டித்து  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் தமிழ் அழகன், மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அகத்தியர் ராகேஷ் சீனு சங்கர், அர்ச்சனா ஈஸ்வர், மாலா, கலைவாணி, வேல்விழி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திட்டக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் கேவிஎம்எஸ்.சரவணகுமார், கோபிநாத் கணேசன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் பெருமாள், விவசாய அணி ரகுபதி,  பலர் கலந்து கொண்டு தமிழகஅரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நிறைவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.

Advertisment