பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதாவது 101 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 89 இடங்களையும், 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜே.டி.யூ. 85 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) 19 இடங்களிலும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கைப்பற்றியுள்ளது.

Advertisment

அதே சமயம் இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அந்த கூட்டணி சார்பில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது. தனித்து போட்டியிட்ட ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில், முதல்வர் பதவிக்கான முணுமுணுப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே தொடங்கியுள்ளது. நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராக பொறுப்பாரா? என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று (15-11-25) முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில், சிராக் பாஸ்வான் துணை முதல்வர் பதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நிதிஷ் குமாருடனான சந்திப்பால், துணை முதல்வர் பதவியை குறித்து வைத்து இந்த சந்திப்பை சிராக் பாஸ்வான் நடத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், 89 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க இதுவரை மெளனமாகவே உள்ளது. இதனால், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.