BJP MLA and Congress MLC clash in front of the minister in karnataka
கர்நாடகாவில் நடைபெற்ற அரசாங்கக் கூட்டத்தில் மாநில அமைச்சர் முன்னிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் எம்.எல்.சி மோதிய கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பீதார் பகுதியில் கர்நாடகா மேம்பாட்டுத் திட்டம் கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, ஹம்னாபாத் தொகுதியில் உள்ள நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த விவாததின் போது, பா.ஜ.க எம்.எல்.ஏ சித்தலிங்கப்பா பாட்டீல் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.சி பீம்ராவ் பாட்டீல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
பா.ஜ.க எம்.எல்.ஏ சித்தலிங்கப்பா பாட்டீல் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.சி பீம்ராவ் பாட்டீல் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இருவரும் கத்திக் கொண்டு ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டி வாக்குவாதம் செய்கின்றனர். அதன் பின்னர், காங்கிரஸ் எம்.எல்.சி தந்து நாற்காலியில் இருந்து எழுந்து சித்தலிங்கப்பாவை நோக்கி நடந்து, அவரை தாக்குகிறார். அதனை தொடர்ந்து, இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கிருந்து மற்ற கட்சி நிர்வாகிகள் அவர்களை இழுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
Follow Us