Advertisment

கராத்தே தியாகராஜன் கொளுத்திய வெடி; கமலாலயத்தில் பரபரப்பு!

karattae-thiyagarajan

நாளை நமதே; தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது தமிழக பாஜக. சென்னை சாஸ்திரி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கொளுத்திப் போட்ட அதிர்ச்சியான வெடிகள், தமிழக பாஜக வில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

Advertisment

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், சமீபத்தில் மலேசியாவில் நடந்த ராதாரவியின் 50 ஆண்டுக்கால கலைச்சேவையை பாராட்டும் விழாவில் கலந்துகொள்ள அங்குச் சென்ற போது, ராதாரவியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் ராதா ரவி. என்னால் பதில் சொல்லமுடியவில்லை. அதாவது, விஜய்யை பத்தி நயினார் நாகேந்திரன் பேசியதை வானதி சீனிவாசன் கண்டிக்கும் வகையில் பேசியிருக்கிறாராமே. தனி நபரைப் பத்தி பேசக்கூடாதா?. இதே வானதி சீனிவாசன், 2021இல் கோவையில் தனக்காக பிரச்சாரம் செய்ய என்னைக் கூப்பிட்டு, ஒரு கூட்டத்துக்கு 1 லட்சம் ரூபான்னு 4 கூட்டத்துக்கு 4 லட்சம் கொடுத்து கமல்ஹாசனைத் திட்டச் சொன்னாங்க. கமலுக்கு எத்தனைப் பொண்டாட்டின்னு திட்டிப்பேசச் சொன்னாங்க. 

Advertisment

இன்னைக்கு, நயினார் பேசினத்துக்கு கண்டிக்கிறாங்க. அன்னைக்கு கமல் ஹாசனை திட்டச் சொன்னாங்க…இன்னைக்கு இப்படிப் பேசுறாங்க. இது வினோதமா இருக்கே?. எனக்கு ஒன்னுமே புரியலையே? என ராதாரவி என்னிடம் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியலை. இப்படி பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டு அரசியலில் ஓடிக்கிட்டு இருக்கு என்று பேசியிருக்கிறார். கராத்தே தியாகராஜனின் இந்த பேச்சு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் பரபரப்பானது. அது மட்டுமல்ல, ராதாரவி சொன்னதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனைப் பற்றி கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்ட இந்த வெடி, தமிழக பாஜக தலைவர்களிடமும் கமலாலய வட்டாரங்களிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

radha ravi kamal hasan Vanathi Srinivasan b.j.p Karate R. Thiagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe