Advertisment

'வழக்கமான அந்த ஸ்டண்ட்டை கூட பாஜக செய்யவில்லை''- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

850

'BJP didn't even do that usual stunt' - Interview with Chief Minister M.K. Stalin Photograph: (dmk)

விழுப்புரத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''ஒன்றிய பாஜக அரசும் அதனுடைய கூட்டாளிகளும் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை கெடுக்க அனைத்து செயல்களை தொடர்ந்து செஞ்சிட்டு இருக்காங்க. அதுக்கு சமீபத்திய உதாரணம்தான் ஒன்றிய அரசு வெளியிட்டு இருக்க கூடிய பட்ஜெட் நிதிநிலை அறிக்கை. மத்திய அரசினுடைய அந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. இதுவரைக்கும் ஒப்புக்காவது திருக்குறள் சொல்லிட்டு வந்தார்கள். இந்த முறை அதுவும் இல்லை.

Advertisment

பேருக்குக் கூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. நம்முடைய பல்லாண்டு கோரிக்கைகள் எதுவும் இல்லை. பொதுவா தேர்தல் நடக்கிற மாநிலங்களுக்கு அந்த ஆண்டு பட்ஜெட்டில் பணம் ஒதுக்குவது பாஜகவின் தந்திரமாக இருக்கும். பீகார், ஆந்திரா, ஒடிசா என அந்த மாநிலங்களுக்கு எல்லாம் அப்படித்தான் நிதி ஒதுக்கினார்கள். சொன்னதை செய்து கொடுத்தார்களா என்று கேட்டால் அதுவும் கிடையாது.  தமிழ்நாட்டுக்கு தேர்தல் வரப்போகிறது பாஜக எல்லா மாநிலங்களிலும் வழக்கமா பண்ணக்கூடிய அந்த ஸ்டண்ட கூட தமிழ்நாட்டுக்குப் பண்ணவில்லை.

Advertisment

அந்த அளவிற்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. நல்லா யோசித்து பாருங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இன்றைக்கு இருக்கிறது. நாட்டிலேயே அதிகமாக நகரமயமான மாநிலம் தமிழ்நாடுதான். அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமும் தமிழ்நாடுதான். இந்தியாவுடைய வளர்ச்சிக்காக நாம் இந்த அளவுக்கு கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட மாநிலத்தில் புதிய நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், மெட்ரோ ரயில்கள் என ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசுக்கு வரிவருவாயை வாரி வழங்கும் நமது மாநிலத்திற்கு மிக மிக சொற்பமான பங்கைத்தான் திருப்பித் தருகிறார்கள்.

11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கிறார்கள். ஒருவேளை எப்படியும் தோற்கத்தான் போகிறோம் இவர்களுக்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என நினைச்சிருக்கலாம். அதான் உண்மை. நாமதான் வெற்றிபெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்து உங்கள் ஆதரவோடு அமைய போகிறது திராவிட மாடல்  அரசுதான்'' என்றார்.

Central budget b.j.p villupuram m.k.stalin dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe