தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவில், தமிழ்நாடு முழுவதும் 1500க்கு மேற்பட்ட இடங்களில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்து இன்று (12.02.2026) மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எதிரொலிக்கவிருக்கின்றன. குறிப்பாக, "வரி மட்டும் வேண்டும்.. நிதி தர முடியாதா?. கல்வி நிதி ரூ.3,458 கோடி எங்கே? குடிநீர் நிதி ரூ.3,000 கோடி எங்கே?. தமிழ்நாட்டிற்கு 'பூஜ்ஜியம்' நிதி ஒதுக்கித் துரோகம் இழைத்த பாஜக! துணை போகும் அதிமுக.
டெல்லியின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது!. மோடியே! ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! 100 நாள் வேலையை நிறுத்தாதே!. எங்கே? எங்கே? தமிழ்நாட்டின் நிதி எங்கே? மோடியே அல்வா கொடுக்காதே. டெல்லிக்கு அஞ்சோம்.. அடிபணியோம்.. தமிழ்நாடு தலைகுனியாது. துரோகி பழனிசாமி.. டெல்லி அடிமைசாமி. அதிமுகவைக் கடுமையாகச் சாடும் பதாகைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர்த்திப்பிடிக்கப்பட இருக்கிறது. நாங்கள் கொடுப்பது 1 ரூபாய். பாஜக அரசு தருவதோ வெறும் 29 பைசா" - தமிழ்நாட்டின் நிதி உரிமைப் போர்.
உபி-க்கு 2.50 ரூபாய். பீகாருக்கு 7 ரூபாய். தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனை. மெட்ரோ திட்டத்திற்கு நிதி தராமல் ரூ.63,000 கோடி கடனைத் தமிழ்நாடு அரசு மீது சுமத்திய ஒன்றிய அரசு. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ரூ.3,458 கோடி 'சமக்ர சிக்ஷா' நிதியை நிறுத்தி மிரட்டல். விவசாயிகள் ஷாக்: அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம் இறக்குமதிக்கு அனுமதி. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு. வேலைவாய்ப்பு: 100 நாள் வேலைத் திட்ட நிதியைக் குறைத்து கிராமப்புற ஏழைகளுக்குத் துரோகம். மீனவர் பிரச்சனை: கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை - மீனவர் தாக்குதலுக்குத் தீர்வு காணாத ஒன்றிய அரசு போன்ற வாசகங்களுடன் பதாகைகள் தயாராகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/dmk-alliance-pro-1-2026-02-12-14-07-57.jpg)