Advertisment

போட்டியின்றி வெற்றிபெற்ற பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள்; வலுக்கும் கண்டனக் குரல்கள்!

mh-maha-yukthi-alliance

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகா யுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக, ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அடங்கிய, இந்த கூட்டணி அங்கு ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட்டணி வலுவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருகின்ற 15ஆம் தேதி (15.01.2026)  மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாள் வாக்கு எண்ணிக்கை அடுத்த நாள் நடைபெற உள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் முன்பே பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகாயுத்தி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர் கட்சி வேட்பாளர்களின் விருப்ப மனு திரும்ப பெற்றுள்ளதே இதற்கு கரணம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மகாயுதி கூட்டணியில் 68 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். இதில் பாஜக வேட்பாளர்கள் 44, சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர்கள் 22, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 2 என வெற்றி பெற்றுள்ளனர். 

Advertisment

இந்த வெற்றிகள் குறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் செல்வாக்கும், மாநிலத் தலைவர் வீந்திர சவான் வகுத்த தேர்தல் யுக்திகளுமே கரணம் என்று கூறுகின்றனர். மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பாஜக எந்த அளவிற்கு வலிமை பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகளின் மிரட்டல்கள் மற்றும் லஞ்சம்  மூலமாக ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மும்பையில் செய்தியாளர்களிடம் "சிபிஐ போன்ற அமைப்புகள் மூலமாக வேட்பாளர்களை மிரட்டுதல், லஞ்சம் கொடுத்து வெற்றிகளை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது பாஜக, இதற்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார். 

b.j.p local body election Maharashtra mahayuti
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe