Bill Gates apologizes on Epstein files affair
சிறார்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, ஜெப்ரி எப்ஸ்டின் கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், அவரது வீட்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள், மின்னஞ்சல்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில், மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த சர்ச்சையையடுத்து, தனது அறக்கட்டளையின் ஊழியர்களுடன் பேசிய பில்கேட்ஸ் இது குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இது குறித்துப் பேசிய அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர், ‘இந்த எப்ஸ்டின் கோப்புகள் குறித்த கேள்விகளுக்கு பில்கேட்ஸ் பதிலளித்துள்ளார். அதன்படி, தனக்கு ரஷ்யப் பெண்களுடன் இரண்டு தொடர்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால், அந்த உறவுகள் எப்ஸ்டினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை. நான் எப்ஸ்டினுடன் நேரத்தைச் செலவிட்டதும், அறக்கட்டளையின் ஊழியர்களைச் சந்திக்க வைத்ததும் என்னுடைய தவறு தான். இருப்பினும், நான் சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. குறிப்பாக, அவரை சுற்றியுள்ள பெண்களுடன் நான் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் சென்றேன், பிறகு ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களில் அவருடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். ஆனால், ஒரு போதும் எப்ஸ்டினின் தீவிற்குச் சென்றதில்லை’ என்று பில்கேட்ஸ் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகள் இருந்தது குறித்தான பல படங்கள் வெளியிடயானதை தொடர்ந்து பில்கேட்ஸைச் சுற்றிப் பல விமர்சனங்கள் எழுந்தன. அத்தகைய ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Follow Us