அருப்புக்கோட்டையில் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில்  பொதுமக்களுக்கு  இடையூறு ஏற்படுத்து வகையிலும் ஆபத்தான முறையிலும் பைக்கில் வீலிங் செய்த மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வகையில் அபராதம் விதித்துள்ளனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் விழாவின் இறுதி நேரத்தில் கல்லூரி வாசலில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி வீலிங் செய்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றிப் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி பல்வேறு மாணவர்களின் இருசக்கர வாகனங்களை இரவோடு இரவாக பறிமுதல் செய்ததோடு அவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.