பீகார் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது. இதனால் பாஜக கூட்டணி ஆட்சி பீகாரில்  ஏற்பட உள்ளது. பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பீகார் அலி நகர் தொகுதியில் 25 வயது பெண் பாடகியான மைதிலி தாகூர் நிறுத்தப்பட்டிருந்தார்.

Advertisment

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிக்கட்டி கிராமத்தில் பிறந்த இவர். மூன்று வயதில் இருந்தே இசை பயின்று  இசை உலகில் கால்பதித்து அரசியலிலும் பிரவேசித்துள்ளார். அலிநகர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி கட்சி வேட்பாளர் பினோத் மிஸ்ராவை விட அதிக வாக்குகள் பெற்று இளம் வயதிலேயே எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

Advertisment

A5749
Bihar MLA sings Tamil song; famous music composer congratulates him Photograph: (BIHAR)

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மைதிலி தாகூர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணான கண்ணே' என்ற பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்காக அந்த பாடலைப் பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார் மைதிலி. இதனை டேக் செய்துள்ள அப்படத்தின் இசையமைப்பாளர் இமான் அவருக்கு 'வாழ்த்து' தெரிவித்துள்ளார்.

Advertisment