பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அம்மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

Advertisment

இது தவிர, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisment

முன்னதாக மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பட்னாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த, தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தலைமையில் பட்டினாவில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது . இதில் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் கெலாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.