Advertisment

பீகார் சட்டமன்றத் தேர்தல் : வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

bh-vote--counting

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து மீதமுள்ள 122 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி (09.11.2025) 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. 

Advertisment

அதன் தொடர்ச்சியாக 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி (11.11.2025) காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன. 

Advertisment

இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 08.30 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 61 இடங்களிலும், இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், ஜன் சுராஜ் கட்சி 2 இடங்களிலும்,  மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.  

INDIA alliance nda alliance VOTE COUNTING Assembly election Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe