'Bharat Ratna Award for Pasumpon Thevar' - Edappadi demands from the Central Government Photograph: (ADMK)
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பயணத்தை மேற்கொள்ளும் அதிமுக எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கும் நிகழ்வில், ஆத்தூர் தொகுதி மக்களிடம் பேசிய அவர், திண்டுக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மேலும் பேசிய அவர், "இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தனது சொத்தின் ஒரு பகுதியை ஜாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைப்போம். அதற்கான முயற்சி எடுப்போம்.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டிய தேவர் பெருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் " என்றார்.