கர்நாடக மாநிலம் பெங்களூரில் கற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், மக்களுக்கு சுவாச கோளாறு சம்பந்தமான பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாகவும், அதனால் சுவாச கோளாறு பாதிப்புகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, சுவாச கோளாறு சம்பந்தமாகக் கடந்த 2024 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 3891 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இது, 2025 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் (சுவாச கோளாறு காரணமாகச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை) 4187 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த பாதிப்பு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் 1.2 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், நகரில் கிட்டத்தட்ட வாகனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, தொடர்ந்து அதிகரித்து வரும் தனி நபர் வாகனங்கள், மோசமான சாலைகள் போன்றவை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகிறது. அதோடு, இந்தியாவில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. இந்த போக்குவரத்துக்கு நெரிசலில் போது வாகனங்களிலிருந்து வரும் புகையின் காரணமாக, நகரின் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இத்துடன், தொழிற்சாலைகளும் காற்றை மாசுபாட்டை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுவாச பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள், சுவாச பாதிப்பிற்கு ஆளானவர்களில் 70 சதவீதம் பேர் புகைப்பழக்கம் கொண்டவர்கள் இல்லை. வேறு எந்த காரணிகளாலும் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படவில்லை. இந்த பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு, காற்று மாசுபாடு தான் காரணமாக இருக்க முடியும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே டெல்லியும் காற்று மாசுபட்டால் பாதிப்பிற்குள்ளாகி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இதனால் டெல்லி அரசு, காற்று மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/airp-2026-02-05-20-03-17.jpg)