குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் ரயிலில் நபர் ஒருவர் பாம்பை காட்டி மிரட்டும் வகையில் பிச்சை எடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சமர்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடைய கைப்பையில் இருந்து பாம்பை எடுத்துக்காட்டினார். பாம்பை பயணிகளிடம் காட்டியபடி அவர் யாசகம் கேட்டார். சிலர் அங்கிருந்தவர்கள் பாம்பை பார்த்தவுடன் பயந்து கொண்டு  அவரிடம் காசு கொடுத்தனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து ரயில்வே துறைக்கு அனுப்பி இருந்தனர் .இது போன்று சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே காவல்துறையினருக்கு ரயில்வே அறிவிப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.