Advertisment

'பேட்டி, விவாத மேடை...' திடீர் தடை விதித்த தவெக

391

tvk Photograph: (head office)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் மற்றொரு ஒரு முக்கிய அறிவுறுத்தலை மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ளார்.
Advertisment
அதாவது கட்சி தலைமையிடம் அனுமதி பெறாமல் மாவட்டச் செயலாளர்களோ அல்லது அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளோ ஊடகங்களுக்கு  பேட்டியோ, நேர்காணலோ கொடுக்கக்கூடாது. விவாத மேடைகளிலோ பங்கேற்க கூடாது. சிலர் கட்சி சார்பில் பேசுவதாக கூறி கட்சி நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்வதால் மாவட்ட செயலாளர்களுக்கும் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகளுக்கும் இந்த அறிவுறுத்தல்  வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 
television Youtube tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe