Bar clash case - A1 association comes to light Photograph: (kerala)
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஐடி ஊழியர் ஒருவரைக் கடத்தித் தாக்கியதாகப் புகார் கொடுக்கப்பட்டது. காரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் பிரபல நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில் நடிகை லட்சுமி மேனனும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் விசாரணைக்காக நடிகை லட்சுமி மேனனையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனையறிந்த லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த சம்பவத்தில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீசார் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக லட்சுமி மேனன் தரப்பை சேர்ந்த மிதுன், அனீஸ், சோனா மல் என்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள லட்சுமிமேனனை தேடிவந்த முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்ஜாமீன் வழக்கை விசாரித்த கேரள நீதிமன்ற நீதிபதிகள் லட்சுமிமேனனை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/30/a5035-2025-08-30-07-29-47.jpg)
இந்த சம்பவத்தில் லட்சுமி மேனன் தரப்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் பரவுர் பகுதியைச் சேர்ந்த மிதுன் கடந்த 2023 ஆம் ஆண்டு திருச்சூர் பகுதியில் தங்க நகை வியாபாரியை வழிமறித்து கடத்தி சென்று நகைகளை பறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் முதன்மை குற்றவாளி (A1) என்பது தெரிய வந்தது. பல வழக்குகளில் மிதுன் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளியுடன் எப்படி லட்சுமிமேனனுக்கு சகவாசம் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரிக்க ஆயத்தமாகி வருகின்றனர். அதேநேரம் லட்சுமி மேனன் தரப்பில் கொடுக்கப்பட்ட முன்ஜாமீன் மனுவில் 'ஐடி ஊழியர் மதுபான விடுதியில் வைத்து தன்னிடம் ஆபாச சைகை காட்டியதை தட்டிக் கேட்ட பொழுது தன்னை மது பாட்டிலால் தாக்க முன்றதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.