தமிழகம் முழுவதும் நடைபெறுகிற புத்தக கண்காட்சியை நடத்துகிற சங்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமாகும். The Bookseller's and Publishers' Association of South India என்கிற ஆங்கில விரிவாக்கத்தினைத் தான் தான் சுருக்கமாக ‘பபாசி’ என்பார்கள். இந்த சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
தேர்தலின் முடிவில் தலைவராக ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தின் ஆர்.எஸ்.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக குமரன் பதிப்பகம் எஸ்.வயிரவன், பொருளாளராக அறிவாலயம் பதிப்பகம் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரும் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களுக்கு பொதுவானவர்கள்.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களுக்கு தனித்தனியாக நிர்வாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் பதிப்பகங்களுக்கு துணைத்தலைவராக நக்கீரன் பப்ளிகேசன் நக்கீரன் கோபால், இணை செயலாளராக கலைஞன் பதிப்பகம் எம். நந்தன் மாசிலாமணி, துணை இணை செயலாளர் ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ், நிர்வாகக் குழு உறுப்பினராக அருண் பதிப்பகம் அருண், அருவி வெளியீடு தோழமை பூபதி, கீதம் பப்ளிகேசன் முத்துசாமி, முன்னேற்றப் பதிப்பகம் வீரபாலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில பதிப்பகங்களுக்கு துணைத்தலைவராக சர்வோதயா இலக்கியப் பண்ணை வே. புருசோத்தமன், துணை இணை செயலாளர் ஆப்பிள் புக்ஸ் எஸ்.ராமு, நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி புக் செல்லர்ஸ் பாலாஜி, ஈஸ்வர் புக் சென்டர் சங்கர், பெல் கோ புக்ஸ் குரு தேவா, ஃ பார்வர்டு மார்க்கெட்டிங் சாதிக் பாட்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நிரந்தர புத்தக கண்காட்சிக்கும் நிர்வாக்குழு உறுப்பினர்கள் தேந்தெடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களே இனி சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று புத்தக கண்காட்சி நடத்தும் பொறுப்பையும் கவனித்துக் கொள்வார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/papasi-2025-12-02-15-06-02.jpg)