Advertisment

நேபாளத்தை அதிரவைத்த போராட்டக்காரர்கள்; கண்டதும் சுட உத்தரவு!

nepal-pro

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த உத்தரவை மீறிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இதற்கு நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

Advertisment

இதன் தொடர்ச்சியாக அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டமானது அந்நாட்டுத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 100க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மற்றொருபுறம் நேபாள அரசு இந்தப் போராட்டம் தொடர்பாக அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினரும் களம் இறக்கப்பட உள்ளனர். அதன்படி மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்களானது வெளியாகியுள்ளது. 

struggle banned social media Nepal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe