வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறைச் சம்பவம், வியாழக்கிழமை இரவு மைமன்சிங்கில் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவத்தில் இளைஞர் தீபு சந்திர தாஸ் (30) என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி, பங்களாதேஷ் பெங்காலி ஊடகமான பர்தா பஜார், உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு தொழிற்சாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, தீபு சந்திர தாஸ், இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் முஹம்மது பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தீபு சந்திர தாஸ் பணிபுரிந்த ஸ்கொயர் மாஸ்டர்பாரி பகுதியில் உள்ள பயனியர் நிட் காம்போசிட் தொழிற்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் வேகமாகப் பரவி, பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தீபு சந்திர தாஸை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.அந்தக் கும்பல் தீபு சந்திர தாஸ் உடலை ஸ்கொயர் மாஸ்டர்பாரி பேருந்து நிலையப் பகுதிக்கு எடுத்துச் சென்று, ஒரு மரத்தில் கயிற்றால் கட்டி, பல்வேறு முழக்கங்களை எழுப்பியபடி தீ வைத்துக் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்பு அந்தக் கும்பல் உடலை டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்று மீண்டும் தீ வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், உள்ளூர் மக்களிடையே பீதியும் ஏற்பட்டது.
தீவிர இஸ்லாமியரான ஷெரீப் உஸ்மான் ஹாடி இறந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் பதற்றம் நிலவியது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், வன்முறைகளுக்கு வழிவகுத்தது. போராட்டக்காரர்கள் பங்களாதேஷின் முன்னணி ஊடகங்களான டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகியவற்றையும் தாக்கினர். இந்த நாளிதழ்கள் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.
இந்தியாவினை வெளிப்படையாக விமர்சித்து வந்த ஜூலை எழுச்சியின் முக்கியத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி இறந்ததைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்த நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் புதிய வங்காளதேசத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், இந்திய இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்தும்,வன்முறைக்கு காரணமானவர்கள் ஒரு போதும் தப்ப முடியாது எனவும் உறுதியளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/a-2025-12-19-18-12-24.jpg)