Advertisment

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா; வங்கதேச அரசு வைத்த அடுத்த செக்!

sheikhhasina

Bangladesh government writes to India demanding immediate extradition of Sheikh Hasina

வங்காளதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Advertisment

கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று (17-11-25) வெளியானது. அதில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாவது, ‘போராடியவர்கள் மீது கொடூர ஆயுத தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது மனித குலத்திற்கு எதிரான வன்முறை. திட்டமிட்டு வன்முறைக்கு மூளையாக ஷேக் ஹசீனா செயல்பட்டுள்ளார் எனக் கூறி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவிடம் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சக கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கு வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை என்றும், எனவே உடனடியாக அவரை வங்கதேசத்திடம் ஒப்படக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

Bangladesh death sentence SHEIKH HASINA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe