பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்த அரசு தற்போது கொண்டு வந்துள்ள திட்டம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய பீகார் துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா, "மக்களிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்காக நகர்ப்புற மேம்பாட்டுத் துறையுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதேநேரத்தில், பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும்" என்று தெரிவித்தார். இதுகுறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதே நேரத்தில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சரான மதன் திலவர், "குழந்தைகள் சுறுசுறுப்பானவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் இருக்க நாட்டு மாட்டுப் பால் குடிக்க வேண்டும் என்றும், எருமைப் பால் குடித்தால் குழந்தைகளின் அறிவு கெட்டுவிடும்" என்று தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் அரசின் முடிவு மற்றும் ராஜஸ்தான் அமைச்சரின் கருத்து ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) போன்ற கட்சிகள் கடும் கண்டங்னங்களை தெரிவித்துள்ளன.
குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாக பொறுப்பாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாறி வருகிறது. பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/907-2026-02-24-16-24-08.jpg)