திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர் கிராமத்திலிருந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 39 ஆண்கள் மற்றும் 1 பெண் ஐயப்ப பக்தர்கள் என மொத்தம் 40 பேர் நேற்று இரவு பேருந்தில் கிளம்பினர். அதன்படி விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முட்லூர் வெள்ளாறு பகுதியில் அதிகாலை பேருந்து வந்தது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வெள்ளாறு பாலத்தின் இடதுபுறத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. 

Advertisment

இதில் பயணம் செய்த 18 பேர் லேசான காயங்களுடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வெள்ளாறு பக்கவாட்டு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது. இதில் ஐயப்பா பக்தர்கள் மற்றும் ஓட்டுநர், கிளீனர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. பிரதீப் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்குப் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சரி செய்தனர். 

Advertisment

cd-iyappa-bus-1

மேலும் பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் பாலத்தின் மீது அந்தரத்தில் நின்ற பேருந்தை இரண்டு கிரான் மூலம் வாகனத்தை அகற்றினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை ஓட்டினாரா? அல்லது வாகனத்தில் ஸ்டேரிங் கட்டானதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.