பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையே, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளுக்கான கால நீட்டிப்பை வழங்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisment

அதில், “நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களைஅளிக்க இன்று (11.12.2025) கடைசி நாள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை சுமார்  6 கோடியே 38  லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் வாக்காளர்களை நீக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.