ஒரு சில இடங்களில் சுகாதாரமான முறையில் இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதில்லை எனப் புகார் எழுந்தது. இந்நிலையில், சைக்கிள் மற்றும் பைக் போன்ற வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர் முறையாக விற்பனை உரிமம் பெற வேண்டும் எனத் தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்கான உரிமத்தை ஆன்லைனில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மேலும் ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின் படி முறையாக இடியாப்பம் தயாரிக்கப்பட வேண்டும். இடியாப்பம் தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், கவனமுடன் தரமான பொருட்களை மட்டுமே கொண்டு தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். காய்ச்சல், நோய்த் தொற்று உள்ளிட்ட உடல் நலப் பாதிப்பு இருப்பவர்கள் இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டாம். காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகளால் பாதித்தவர்கள் அவர்களுடைய கைகளால் இடியாப்பத்தைப் பொதுமக்களுக்கு வழங்கும் போது அவரது நோய்த் தொற்று பிறருக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் இடியாப்பத்தை விற்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடியாப்ப விற்பனையாளர்கள் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தைப் பெற்ற வேண்டும். அதோடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இடியாப்பத்தை முறையாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இடியாப்பம் விற்பனை செய்வோர் இந்த விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/25/food-safety-idyaappam-2025-12-25-18-12-51.jpg)