Advertisment

“தீபாவளிக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் கவனத்திற்கு...” - சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

tambaram-city-police-omr

நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான மக்கள் பயணிக்க உள்ளனர். இதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்த சாலையில் இரண்டு நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என, தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17,18, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்படும்பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்மதுரவாயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருக்கோயிலூர் வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஒரகடம்சந்திப்பில் திருப்பி விடப்படும்

Advertisment

ஒரகடம் சந்திப்பில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதிகளில் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை செல்ல வேண்டும்சிங்க பெருமாள் கோயில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை செல்ல வேண்டும். இரும்புலியூர் பாலத்தில் நெரிசல் ஏற்பட்டால் கனரக வாகனங்கள் வண்டலூர் வெளிவட்ட சாலையில் திருப்பி விடப்படும்

tnstc-bus-yellow

பொதுமக்களுக்கான பிற வசதிகள் :

புதுச்சேரி, கடலூர். சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக OMR மற்றும் ECR வழித்தடங்களைப் புறப்பாடு மற்றும் திரும்பி வருவதற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சாலை மார்க்க மான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க. சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து (2,092) சிறப்புப் பேருந்துகள், 16.102025 முதல் 19.10.2025 வரை இயக்கப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு கோரிக்கை :

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி இரயில் நிலையங்களிலிருந்து, கூடுதல் புறநகர் இரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கபட்டுள்ளது. 

traffic police police tambaram traffic diwali
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe