Advertisment

“ஏ.ஐ. குறித்து விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம்” - பிரதமர் மோடி!

modi-mic

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா - ஏ.ஐ. உச்சி மாநாடு  (India AI Impact Summit) இன்று (16.02.2026) மாலை தொடங்க உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி   தொடங்கி வைக்க உள்ளார். அனைவரின் நலனுக்காக, அனைவரின் மகிழ்ச்சிக்காக என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. அதன்படி இந்த மாநாடு இன்று முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை என 5 நாட்கள் நடைபெற உள்ளது. சர்வதேசப் பிரதிநிதிகள் உட்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

உலகளாவிய செயற்கை நுண்ணறிவை சூழமைப்பிற்குள் புதிய கூட்டாண்மைகளை வளர்ப்பதையும், வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்த நிகழ்வு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 3250க்கும் மேற்பட்ட தொலைநோக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்கும் 500-க்கும் மேற்பட்ட அமர்வுகள் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம். டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று முதல் ‘இந்தியா - செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. 

Advertisment

இந்த உச்சிமாநாட்டிற்காக உலகெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள உலகத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘சர்வஜன ஹிதாய, சர்வஜன சுகாய’ அதாவது அனைவரின் நலன் மற்றும் அனைவரின் மகிழ்ச்சி என்பதாகும். இது மனிதர்களை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்காகச் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதில் நமக்கிருக்கும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளை செயற்கை நுண்ணறிவு உருமாற்றி வருகிறது. 

modi-1

இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த உலகளாவிய விவாதங்களை மேம்படுத்தும். இந்த உச்சிமாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, ஆக்கப்பூர்வமான மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன் 1.4 பில்லியன் இந்திய மக்களின் முயற்சியால், நமது நாடு செயற்கை நுண்ணறிவு மாற்றத்தின் முன்னணியில் நிற்கிறது. டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு முதல் துடிப்பான ஸ்டார்ட்அப் (StartUp) சூழமைப்பு மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வரை, செயற்கை நுண்ணறிவு துறையில் நமது முன்னேற்றங்கள் லட்சியத்தையும் பொறுப்பையும் ஒருசேரப் பிரதிபலிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Conference artificial intelligence submit Delhi Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe