நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம் நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 25 அன்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது. கோரிக்கைகள் பின்வருமாறு...
தொழிற்சாலை கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் கழிவு நீரை நேரடியாக உள்ளாட்சி நிர்வாகம் விடுகிறது. எனவே கண்டிப்பாக அனைத்து உள்ளாட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ வேண்டும்.திடக்கழிவுகளை உள்ளாட்சி நிர்வாகம் நொய்யல் கரை மற்றும் ஆற்றில் கொட்ட கூடாது. நொய்யல் ஆற்றை அளவீடு செய்து முற்புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை உடனடியாக தடுக்க வேண்டும். ஆற்றை உருவாக்கும் உயிர் நாடியான பல ஓடைகள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை கண்டறிந்து அகற்ற வேண்டும். நொய்யல் பாசன குளங்களை தூர்வார வேண்டும். குளங்களில் கழிவு நீர், திடக்கழிவு, கலப்பதை கொட்டுவதை தடுத்து குளங்கள் பராமரிப்பை பாசன விவசாயிகள் இடம் வழங்க வேண்டும். குளங்களுக்கு நீர் செல்லும் இராஜவாய்கால் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சரியாக பராமரிக்க வேண்டும்.
ஏற்கனவே இராஜவாய்கால் சில இடங்களில் கான்கிரீட் சுவர் உள்ளது. அதை அனைத்து இடங்களிலும் கான்கிரீட் சுவர் கட்ட வேண்டும். மழைகாலங்களில் கரைபுரண்டு ஓடும் மழை நீரை குளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.குளங்கள் விவசாய நீர்த்தேவை குடிநீர்த்தேவை மக்களின் நீர்த்தேவைக்கே தவிர மீன் வளர்த்து வருமானம் செய்ய அல்ல. அவர்கள் கட்டுப்பாட்டில் குளத்தை வைத்துக் கொண்டு நிரம்பி இருக்கும் கழிவு நீரை திறப்பதும் இல்லை, மழைநீரை குளத்திற்கு கொண்டு வருவதும் இல்லை எனவே மீன்பிடி குத்தகையை இரத்து செய்ய வேண்டியது அவசியம். ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டமானது நடைபெற உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/na-2026-02-20-18-15-12.jpg)