Attempted robbery at ATM; Police are working hard to catch 2 people who were reported - Police are collecting a list Photograph: (atm)
ஈரோடு ஈ.வி.என்.சாலையில் கர்நாடகா வங்கியின் ஏ.டி.எம்.மற்றும் இதன் அருகே எஸ்.பி.ஐ.வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு வங்கிகளின் ஏ.டி.எம்.மையங்களும் இரவு நேர காவலாளிகள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏ.டி.எம்.மையங்களில் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்.எந்திரத்தை கற்களால் உடைத்து அதில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ஏ.டி.எம்.மையத்தில் இருந்து அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர். தொடர்ந்து ஏ.டி.எம்.மையத்தில் அலாரம் அடித்ததை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் மற்றும் சூரம்பட்டி போலீசார் ஏடிஎம் எந்திரம் சேதமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றியும், தடயங்களை கைப்பற்றியும் விசாரணை நடத்தி நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நேற்று நள்ளிரவு இரண்டு நபர்கள் நோட்டம் விட்டவாறு அந்தப் பகுதிக்கு வந்து உள்ளனர். முதலில் கர்நாடக வங்கியில் ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் புகுந்தார். மற்றொரு நபர் முகத்தில் லுங்கி கட்டிக்கொண்டு வெளியில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளவர்கள் அங்க வெளிப்பகுதியில் இருந்த சூலாயுதம், மற்றும் கற்களை எடுத்து ஏ.டி.எம் மையத்தை அந்த மர்ம நபர் உடைக்க முயன்று உள்ளார். ஆனால் அவரால் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தனர் அப்போது அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் ஈரோடு டவுன் மற்றும் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சிசிடிவி கேமரா கட்சியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் பழைய குற்றவாளிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதை போன்று ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் பட்டியல்களை சேகரித்து வருகின்றனர். தனிப்படை போலீசாரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Follow Us