Advertisment

வாயில் பாலிதீனை திணித்து குழந்தை கடத்தல் முயற்சி?- வடமாநில நபரை தாக்கிய மக்கள்

a5446

Attempt to kidnap in thirupathur ? - Police investigation Photograph: (thirupathur)

திருப்பத்தூரில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் குழந்தையின் வாயில் பாலிதீன் கவரை வைத்து குழந்தையைக் கடத்த முயன்றதாக தகவல் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் அந்த வடமாநில நபரை மரத்தில் கட்டிப்போட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று வீட்டருகே உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்ற நபர் ஒருவர் குழந்தையின் வாயில் பாலிதீன் கவரை திணித்து அங்கிருந்து கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரைப் பிடித்து தாக்கியுள்ளனர். குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

a5447
Attempt to kidnap in thirupathur ? - Police investigation Photograph: (thirupathur)

பின்னர் அருகில் இருந்த மரத்தில் அந்த நபரை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்துவந்த அம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்  உள்ளதால் உண்மையிலேயே குழந்தை கடத்துவதற்காக வந்த நபரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

north indian police childkidnap thirupathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe