attacking incident - Villagers protest Photograph: (chengalpatu)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா கேட்ட நபர் பட்டாக் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள புக்கத்துறை பகுதியில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது. அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் எழிலரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளோம் என பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜன் என்பவர் 'எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வாங்கி தருவதாக உறுதி கொடுத்தீர்கள் ஆனால் கடைசிவரை வாங்கி கொடுக்கவில்லை' என தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் எழிலரசு அடியாட்களை வைத்து விமல்ராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பட்டாக் கத்தியால் தாக்கியதில் விமல்ராஜின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விமல்ராஜ்க்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us