Attack on student at social justice hostel - swift action Photograph: (ramanthapuaram)
பள்ளி விடுதியில் ஏழாம் வகுப்பு மாணவனை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்மையில் பல்வேறு சமூக தலைவர்கள் பெயர்களில் இயங்கிவரும் அரசு விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்திருந்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகரில் தமிழக அரசின் சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளி மாணவர்கள் பலர் தங்கிப் பயின்று வரும் நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவரை 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து கொண்டு கூட்டாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்த காட்சிகள் வைரலான நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவரும் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 12ஆம் வகுப்பு மாணவரின் நோட்டை கிழித்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Follow Us