Attack on journalist who went to collect news about the quarry - Political parties condemn Photograph: (karur)
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணாயபுரம் அருகே கல்குவாரி ஒன்று முறைகேடாக நடப்பது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24 தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணாயபுரம் அருகே கல்குவாரி ஒன்று முறைகேடாக நடப்பது குறித்து செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சியான நியூஸ் தமிழ் 24 தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் சென்றுள்ளனர். பல கிலோமீட்டர் கணக்கில் பூமிக்கு அடியில் தோண்டி கனிமவளங்களை எடுப்பது எதிர்காலத்தில் இயற்கைக்கு மிகப்பெரிய பேரிடருக்கு வழிவகுக்கும் என்ற வகையில் பல இடங்கள் இருக்கிறது.ஆனால் சில இடங்களில் எல்லையை மீறி கனிம வளங்கள் வெட்டப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல் கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கல்குவாரியல் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியில் இது குறித்து செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் 24 தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், மற்றும் சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் கல்குவாரியை படம்பிடித்த ஒளிப்பதிவாளரின் கருவியை சேதப்படுத்தியதோடு, செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுக எம்.எல்.ஏ பழனி ஆண்டியின் ஆட்கள் என்ற குற்றச்சாட்டை தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வைத்துள்ளனர். எம்.எல்.ஏ முன்பே இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒரு கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us