Advertisment

மண் அள்ளுவதை தடுத்த பெண் விஏஓ மீது தாக்குதல்-நாமக்கல்லில் பரபரப்பு

a4940

Attack on female VAO who stopped digging soil - stir in Namakkal Photograph: (vao)

அனுமதியின்றி மண் அள்ளியவர்களை தட்டிக்கேட்டுத் தடுத்து நிறுத்திய பெண் விஏஓ வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் பாலமேட்டில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ சிவகாமி  தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த நிலையில் வீடு தேடி வந்த சீனிவாசன் விஏஓ சிவகாமி  மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் காயமடைந்த இந்த பெண் விஏஓ நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த கிராம நிர்வாக அலுவலர் நலச் சங்கத்தினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

பெண் விஏஓ சிவகாமி மீது தாக்குதலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

attack namakkal VAO women safety
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe