Advertisment

பாஜக பிரமுகர் வீட்டின் மீது தாக்குதல்- போலீசார் விசாரணையில் டிவிஸ்ட்

5887

bjp Photograph: (police)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை விமர்சித்துப் பேசிய நிலையில் பாஜக பிரமுகர் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னையை அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வமணி. இவர் கடந்த 25 ஆம் தேதி அதே பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்ற செல்வமணியை நோக்கி வந்த சிலர் அவரை தாக்க முயன்றுள்ளனர். இதனால் செல்வமணி பயந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். வந்த நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், இரண்டு கார்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து செல்வமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

5888
bjp Photograph: (police)

அந்த புகாரில், 'வாஜ்பாய் பிறந்தாள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து சில கருத்துக்களை கூறி விமர்சித்து பேசியதற்காக தான் வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது' என்று தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த தாக்குதல் வீடியோவை வைத்து விசாரித்து ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.

5890
bjp Photograph: (police)

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த அமர்நாத் என்பவரின் ஆதரவாளர்கள் என்பது தெரிந்தது. அமர்நாத்துக்கும் செல்வமணிக்கும் வாஜ்பாய் பிறந்தநாள் கூட்டம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தனர். போலீசாரிடம் புகாரளித்த செல்வமணியோ தன்னை தாக்கியது அமர்நாத்தின் ஆதரவாளர்களாக இருந்தாலும் செல்வ பெருந்தகையின் தூண்டுதலில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிடிவாதமாக நின்றார். மீண்டும் நீண்ட விசாரணை செய்த பிறகு செல்வப்பெருந்தகை தூண்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் உள்கட்சி விவகாரம் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் முடிவுக்கு வந்த போலீசார் அமர்நாத்தை வலை வீசி தேடி வருகிறார்கள்.

b.j.p CCTV footage Chennai police Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe