நெல்லையில் இஸ்லாமிய மாணவிகள் தங்கிப் பயின்று வரும் விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மாணவிகள் தங்கிப் பயின்று வருவதற்காக விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சிறுமிக்கு விடுதியின் காப்பாளர் அபூபக்கர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி விடுதியின் மற்றொரு பெண் காப்பாளர் வகிதாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ இதுகுறித்து யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக விசாரித்த போலீசார் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு விடுதியின் காட்பாலர்களான அபூபக்கர் மற்றும் வகிதா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.