Advertisment

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?

564

Assembly elections in Tamil Nadu in the second week of April? Photograph: (election)


வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்மரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தேர்தல் குறித்தான பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வருகின்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.  

Advertisment

இந்தநிலையில், "தமிழ் நாட்டில் தேர்தல் நடப்பதற்கு இன்னும் 65 நாட்கள் தான் இருக்கின்றன. முதல் கட்டமாகத் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மேலும், மூத்த நிர்வாகிகள் தேர்தல் களத்தில் தங்களை முன்னிறுத்துவதைத் தவிர்க்க  வேண்டும். குறிப்பாக, தேர்தல் பொறுப்பாளர்கள் அவரவர்கள் தொகுதிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

Advertisment

பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட இருப்பதால், இந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும். எனவே,  அனைவரும் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், தமிழிசை மற்றும் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும், இந்த கூட்டத்தில் மாஜி மாநில  தலைவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில்,  இவ்வாறாக, இன்னும் 65 நாட்களில் தேர்தல் நடக்க இருப்பதாக பாஜக நிர்வாகி கூறியுள்ளதை அடுத்து, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ANNOUNCED Tamilnadu Election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe